இரு வேறு `துருவங்கள் தான் ஈர்க்கும் என்றில்லை. காதலில் ஒரே துருவங்கள் கூட ஈர்க்குமே!
19 - ம் நூற்றாண்டு அறுத பழைய காதல் கவிதை (கதை) ஒன்னு சொல்றேன்.
எலிசபத் பாரட் மற்றும் ராபர்ட் பிரௌனிங் இடயே பரிமாறிக்கொண்ட காதல் கடிதங்கள் 2 பெரும் வால்யும்களாக வெளியிடப்பட்டது. காதல் கடிதம் எழுத விரும்புவோர் அதிலிருந்து 'ஆட்டைய' போட்டுக்கொள்ளலாம். கதையை கேட்டீர்களானால் இந்த 'சிச்சுவேஷன்' பொதுவானது. அனால் கதை வித்தியாசமானது.
இருவரும் கவிஞர்கள் தான். இதில் புகழ் பெற்றவர் எலிசபத். அம்மா இல்லாத எலிசபத் அப்பாவோட கண்டிபிலேயே வளந்ததினால் 39 வயதிலேயும் உலகம் தெரியாமல் இருந்தாள். வீட்டு வாசல் கூட எப்படி இருக்கும் என்று தெரியாது.
ஒருநாள் ராபர்டின் கவிதையை படித்துவிட்டு அவரை பாராட்டியே தீரவேண்டும் என்று முடிவெடுத்தாள். அப்போது அவள் புகழின் உச்சியில் இருந்ததால் 1844 - ல் வெளிவந்த "லேடி ஜெரால்டின் காதல்" என்ற கவிதையில் ராபர்டை மறைமுக பாத்திரமாக்கினாள்.
அதற்கு ராபர்ட் நன்றி கடிதம் எழுத, இருவரும் மாறி மாறி கடிதம் எழுதிக்கொண்டனர்.
ஒருநாள் ராபர்ட் எலிசபத்தை பார்த்தே தீரவேண்டும் என்று சொல்ல, அவள் நாளையும் (அப்பா இல்லாத) நேரத்தையும் சொல்ல, இருவரும் சந்தித்துக் கொண்டனர். மாறி மாறி டப்பா டப்பாவாக நெய் ஊற்றிக்கொண்டனர்.
மறு கடிதத்திலேயே "என்னை திருமணம் செய்து கொள்கிறா?" என்று கேட்டார் ராபர்ட். திருமணமாவது? எங்க அப்பன் வெப்பனோட இருக்கான் என்று எலிசபத் சொல்ல, மென்மையான கடிதங்கள் மூலம் ராபர்ட் மெல்ல மெல்ல எலிசபத்துக்கு துணிவூட்டினார்.
தந்தையின் மிரட்டல்களையும் மீறி ராபர்டுடன் இத்தாலிக்கு சென்றாள். திருமணம் அவளை அடியோடு மாற்றியது. எப்போதும் சோகமாக வீட்டிலேயே இருந்த எளிசபதை உற்சாகம் சூழ்ந்து கொண்டது. வாழ்கை மிக மிக அர்த்தமுள்ளதாக மாறியது.

This entry was posted
on Sunday, June 29, 2014
at 11:50 AM
. You can follow any responses to this entry through the
comments feed
.