கல் தோன்றி மண் தோன்றா காலம் முதல் காதல் இன்னுமும் இருந்துகொண்டுதான் இருக்கிறது. ஆனால் அரியணை எரிய அரசர்களும், வாள் வரைந்த எல்லைகளும் இப்போது இல்லை.
பல ஞானிகளும் யோகிகளும் காதல் காவியங்கள் இயற்றியுள்ளனர். யமுனைக்கு உயிர் வார்த்த ராதா கிருஷ்ணா காதல் காவியம், வியாசரின் மகனான சுக ப்ரும்ம ரிஷியால் எழுதப்பட்டது தான்.
திரேதா யுகம். பெண்ணுக்கு ஆபத்து என்றால் பறவைகளும் விலங்குகளும் கூட காப்பாற்ற போராடி உயிர்த்யாகம் செய்த காலம். பெண்கள் தங்கள் வாழ்கை துணையை தாங்களே தேந்தெடுக்க சமூகம் அனுமதித்த காலம்.
கன்னியரின் கடைக்கண் பார்வை பட்டால் காளையர்க்கு மாமலையும் ஓர் கடுகாம். இப்போது புரிகிறதா, யாருமே உடைக்கமுடியாத சிவ தனுசை ராமன் ஒரு குச்சியை உடைப்பதுபோல உடைத்தான் என்று?
அட ஒரு பொடிப்பயல் வில்லை உடைத்துவிட்டானே யாரவன்? தசரதன் மகன். மைதிலியின் தாய் ஜனகனை ஒரு இடி இடிக்க. அதன் அர்த்தம் அறிந்த விஸ்வாமித்ரர் "தசரதன் மகன் தான். ஆனால் வசிஷ்டரின் வளர்ப்பு" என்றார்.
சீதாவிடம் காதல் வயப்பட்ட ராமன் அதிலிருந்து கடைசிவரை மீளவே இல்லை. வேறுஒரு பெண்ணின் காதல் சீதையின் காதல் அளவிற்கு இல்லையெண்டால்? அதனால் இந்த விஷயத்தில் ராமன் 'ரிஸ்க்' எடுக்கவில்லை.
த்வாபர யுகம். பெண்ணுக்கு அவமானம் என்றால் சபையோர்கள் கூட மேலும் கீழும் 'கார்க்' வைத்து அடைத்துக்கொண்டு இருந்த காலம். பெண்களுக்கு கட்டாயமாக விருப்பம் இல்லாதவனை திருமணம் செய்வித்த காலம்.
ருக்குமிணிக்கு சிசுபாலனை கட்டயதிருமணம் செய்ய ஏற்பாடு நடந்து கொண்டிருந்த வேளை.
ருக்குமிணி கடிதம் எழுதி அந்த வழியாக சென்ற ஒரு முதியவரிடம் கொடுத்தனுப்பினாள். (இந்த பகுதியில் இணைக்கப்பட்டுள்ள பாடல் வரிகள் "ஜோதா அக்பர்" என்ற திரைப்படதிலிருந்து சுடப்பட்டது.)
மன் மோஹனா!
என்னுயிர் கண்ணா!
கார்முகில் வண்ணா!
வாராயோ
கோதையின் குரலை கேளாயோ
விடை பெற்று வாராய் காசி மதுரா
விடைசொல்ல வாராய் வாழ்கை புதிரா
நீயின்றி சுயம்வரமா?
கார்முகில் வண்ணா வாராயோ
கோதையின் குரலை கேளாயோ
இக்கடிதத்தை தாங்கிக்கொண்டு நடைபயணமாய் த்வாரகைக்கு சென்றார் அந்த முதியவர். இதற்கிடையில் சிசுபாலன், கிருஷ்ணனின் பரம எதிரியான ஜராசின்தனை கூட்டு சேர்த்துக்கொண்டு தனது திருமணநாளில் கிருஷ்ணனனால் தொந்தரவு இருக்ககூடாதென்று ஜராசிந்தனின் படையையும் சேர்து காவல் வைத்தான்.
ப்ருந்தாவன நந்தகுமாரா
சகியின் வேண்டுதல் அறிவாயா?
நீங்காமல் வருவாயா? நகம் போலே பிரிவாயா?
நவநீதா முரளிமநோஹாரா
நங்கையின் மனதை புரிவாயா? புறக்கணித்தே செல்வாயா?
என் சோகங்கள் தீர்ப்பாயா?
என் தாகங்கள் தீர்ப்பாயா?
ஒருவழியாக அந்த முதியவர் த்வாரகையை அடைந்தார். கிருஷ்ணன் அவருக்கு காலலம்பி, உணவு அளித்து உபசாரங்கள் எல்லாம் செய்தான். ஜராசிந்தனின் சேனைகளும் சிசுபாலனின் சேனைகளும், கோட்டை காவல் வ்யூகம் அமைத்தன.
புருஷோதமனே உன் உதட்டில் புல்லாங்குழலாய் தவழ்வேனா?
உன் ச்வாச காற்றாகி உயிர்பெற்று வாழ்வேனா?
பார்த்திபனே உன் பார்வையினால் பார்கடலமுதம் பெறுவேனா?
பசிதாகம் மறப்பேனா?
உன் கோகுல தோட்டத்திலே கோபியராவேனா?
ஓய்வேடுதப்பின் அந்த முதியவர் தான் கொண்டுவந்த கடிதத்தை கிருஷ்ணனிடம் கொடுத்தார். அதை படித்துவிட்டு புன்சிரிப்போடு ரதத்தில் ஏறினான் கிருஷ்ணன். ருக்மிணிக்கு மணப்பெண் அலங்காரம் செய்து மனவரைக்கு அழைத்து சென்று கொண்டிருந்தனர்.
வாழ்கையென்னும் கடலின் தினமும் அலையின் மேலே அலையடிக்க
இதயமென்னும் படகு அதில் தடுமாறி மோதிடுதே
தூயவனே துடுப்புகள் போட்டு கரையினில் ஏற்றி விடுவாயா?
நடுக்கடலில் விடுவாயா?
வசீகரா வனமாலி என் வேதனை தீராய் நீ.
என்று ருக்மிணி மனதிற்குள் நினைக்கும் முன், மணவறைக்கு ரத்தத்தில் வந்தான் கிருஷ்ணன். வழக்கமாக எல்லா கதைகளிலும் வருவது போல அவள் ரத்தத்தில் ஏறினாள். மின்னலாய் மறந்தனர் இருவரும்.
சிசுபாலன் ஜராசிந்தனிடம் "ருக்மிணி எங்கே?" என்று கேட்டான்.
"கிருஷ்ணன் தூக்கிண்டு போய்ட்டான்."
"நீ என்ன பண்ணிண்டு இருந்தே?"
"நாங்களெல்லாம் பாத்துண்டு இருந்தோம்."
"அதுக்காக தான் உங்களையெல்லாம் நான் காவலுக்கு வச்சேனா?"
"சிசுபாலா! கோபப்படாதே. இதுதானே உனக்கு முதல்முறை கிருஷ்ணனிடம் தோற்பது! முதல் முறை அப்டிதான் இருக்கும். போக போக சரியாய்விடும்."

This entry was posted
on Saturday, June 28, 2014
at 3:29 AM
. You can follow any responses to this entry through the
comments feed
.