ஒரு மின் சக்தி!  

Posted by Vishnu

தன்னை உயிருக்கு உயிராக நேசிக்கும் ஒருவர் / ஒருத்தி இவ்வுலகில் இருக்கிறார் / 
இருக்கிறாள்  என்று தெரிந்தால் அடிமனதிலுள்ள மகிழ்ச்சி சுனாமி போல பொங்குகிறது.  உடலில் ஒரு மின்சக்தி பாய்கிறது. அவரோடு / அவளோடு சேர்ந்து வாழ்கையை புத்தம் புதிதாய் எதிர்கொள்ள வேண்டும் என்று தோன்றுகிறது. பார்பவர்கிளிடமெல்லாம் தன்  பற்றி  சொல்லவேண்டும் என்று துடிக்கிறது.

காதல் வயப்பட்டால் மட்டும் போதாது. அதை உரியவரிடம் முறையாக வெளிப்படுத்த வேண்டும்.

ஜான் அதிகம் படித்தவரில்லை. ரொம்ப ரிசர்வடு. கடும் உழைப்பின் மூலம் முன்னுக்கு வந்தவர். இப்போது ஒரு பண்ணைக்கு சொந்தக்காரர். எளிமையான நல்ல மனிதர்.

அதே ஊரில் வெயிட்டராக பணியாற்றினார் லூயிஸ் என்ற பெண். அந்த ஹோட்டலில் தான் ஜான் தினமும் காபி குடிக்க போவார். லூயிஸ் தான் அவருக்கு எப்போதும் காபி கொடுப்பாள். ஜானுக்கு காபி பிடித்திருந்தது. ஜான் தான் அதிகம் பேசும் டைப் இல்லையே தவிர லூயிஸ் நன்றாக பேசுவாள்.

லேசான புன்னகையுடன் அவளையே பார்த்துகொண்டு அவ்வபோது தலையாட்டுவதொடு சரி. பிறகு, "சரி! நேரமாகிறது. வருகிறேன்" என்று கிளம்பி விடுவார்.

நாட்கள் உருண்டோடின. ஒருநாள் வழக்கம்பொல ஜான் வந்தார். லூயிஸ் சாண்ட்வெஜா காபி தான என்று கேட்க. அதெல்லாம் இருக்கட்டும் இப்படி வந்து உட்கார் என்றார். அவளும் வந்து உட்கார்தாள். நீ என்னை திருமணம் செய்து கொள்வாயா? என்று கேட்டார். திகைத்து போனாள் .

ஜானை அவளுக்கு பிடிக்கும். ஆனால் காதல் பேச்சு வரும் என்று சற்றும் அவள் எதிர்பார்க்கவில்லை. "இப்படி திடீர்னு கேட்டா  எப்பிடி? இரண்டுநாள் டைம் குடுங்கோ "அபிடினாள். "ஸூர். காபி கொண்டுவா" என்றார்.

ஒரே வாரத்தில் அவர்கள் திருமணம் நடந்தது.

வீட்டை விரிவு படுத்தினார் ஜான். ஆணின் அலட்சியத்தால் அலங்கோலமாய் இருந்த வீடு இப்போது புதுகோலம் பூண்டது.

ஒருநாள் லோயிசுக்கு கடுமையான தலைவலி ஏற்ப்பட்டது. தனது டாக்டர் நண்பனை தொடர்பு கொண்டார் ஜான். டாக்டரால் டையகனைஸ் செய்ய முடியவில்லை.

லூயிசிடம் ஜானை  பற்றி விசாரித்தார். "ஜான் மிகவும் நல்லவர். எனக்காட எதுவும் செய்வார் " என்றாள். இருந்தும் அவள் பேச்சில் சுரத்தில்லை. மீண்டும் அழுத்தி கேகில், "அவர் அன்பானவராகதான் இருக்கிறார். ஆனால் நான்தான் அவருக்கு ஏற்றவளாய் ஆரோக்யமானவளாய் இல்லை" என்றாள்.

ஆறுமாதங்கள் கழித்து லூயிஸ் கடும் வயிற்று வலியால் துடித்தாள். மருத்துவமனையில் பரிசோதனை செய்ததில் அவளது அப்பன்டிக்ஸ் வெடித்திருந்தது. ஆபரேஷன் ஏற்பாடுகள் நடந்தன.

அவளுக்கு ஒன்றும் ஆகாதே? என்று ஜான், டாக்டர் காலை பிடித்துகொண்டு அழுதார். ஜான் அழுது அவர் அதுவரை பார்த்ததே இல்லை.

ஆனால் ஆபரேஷன் முடிந்தும் அவள் உடல்நிலை கவலைக்கிடமாகத்தான் இருந்தது. "நான் வலிமாயானவளாய் இல்லை. அவருக்கு நான் ஏற்றவள் இல்லை. அவருக்கு நான் தேவயில்லை." என்று ஏதேதோ புலம்பிகொண்டிருந்தாள். "இல்லை. ஜானுக்கு நீ தேவை" என்றார் டாக்டர். நம்பிக்கை இல்லாதவளாய் கண்களை மூடிக்கொண்டாள்.

ஜான் தண்ணீர் கூட குடிக்காமல் காத்துக்கிடந்தார். "ஜான்! அவள் உடல் நிலை தேறுவதற்கு அவளுக்கே விருப்பமில்லை என படுகிறது. நிறைய ரத்தம் இசந்திருக்கிறாள்." என்றார் டாக்டர். "எவ்வளவு வேண்டுமோ என் உடம்பிலிருந்து எடுத்துகொள்ளுங்கள்" என்றார்  ஜான்.

நீங்கள் லோயிசை அவ்வளவு காதலிக்கிரீர்களா என்றார் டாக்டர். என்ன கேள்வி டாக்டர். இல்லை என்றால் அவளை நான் மணந்துகொண்டிருபேனா? எண்டார் ஜான். என்றாவது ஒருநாள் இதை அவளிடம் சொல்லிருக்கிரீர்களா? என்றார் டாக்டர். அது அவளுக்கே தெரயுமே . அவளுக்கு நான் ஒரு குறையும் வைததில்லையே என்றார் ஜான்.

குரூப்பை டெஸ்ட் செய்துவிட்டு, லூயிசிடம் டாக்டர் சொன்னார், "உன் கணவர் உனக்கு ரத்தம் குடுக்க போகிறார்"

ஜானின் ரத்தம் டியூப் வழியாக லோயிசை அடைந்தது. நடுவில் ஒரு ஸ்க்ரீன்.

"நான்  எனது ரத்தம் முழுதும் வேண்டுமானாலும் உனக்காக தருவேன். நீயும் என்னை போல ஸ்ட்ரோங் ஆகபோகிறாய்."

லூயிஸின் நாடி துடிப்பு மெல்ல சீரானது. "ஐ லவ் யூ  ஜான்" என்றாள்.

ஐ லவ் யூ  லூயிஸ் என்றார்.

ஊசிகள் டியூபுகள் அகற்ரபட்டவுடன், தனது மார்பில் லூயிஸை சைதுகொண்டிருந்தார். லூயிஸின் கை அவரது கையை இருக்க பற்றியிருந்தது. அவளது முகத்தில மலர்ச்சி தெரிந்தது.

லூயிஸ் குணமடைந்து விட்டாள்.

உண்மையில் லூயிஸின் ரத்தமும், ஜானின் ரத்தமும் வேற வேற குருப். ஜானின் ரதம் லூயிசுக்கு செலுத்தபடவில்லை.

 ஆனால், கணவனின் ரத்தம் அவள் உடலுக்குள் போகிறது என்ற எண்ணம் அவளுக்கு பரவசத்தை தந்து அவளை உயிர்பித்து விட்டது. "ஐ லவ் யூ" என்று உணர்ச்சிவசப்பட்டு கதறவைத்த ரத்தம் அது.

அவளுக்கு உயிரை மீட்டு தந்தது, ரத்தம் மட்டுமல்ல, அவர் வெளிபடுத்திய உணர்சிகரமான வார்த்தைதான்.

அவ்வளவு சக்தி அந்த வார்த்தைகளுக்கு உண்டு.

முத்தம் குடுக்கும்போது கும்மிருட்டுலேயும் கண்ண முடிக்கறாங்க பா!

ஒரு வானவில்  

Posted by Vishnu

இரு வேறு `துருவங்கள் தான் ஈர்க்கும் என்றில்லை. காதலில் ஒரே துருவங்கள் கூட ஈர்க்குமே!

19 - ம் நூற்றாண்டு அறுத பழைய காதல் கவிதை (கதை) ஒன்னு சொல்றேன்.

எலிசபத் பாரட் மற்றும் ராபர்ட் பிரௌனிங் இடயே பரிமாறிக்கொண்ட காதல் கடிதங்கள் 2 பெரும் வால்யும்களாக வெளியிடப்பட்டது. காதல் கடிதம் எழுத விரும்புவோர் அதிலிருந்து 'ஆட்டைய' போட்டுக்கொள்ளலாம். கதையை கேட்டீர்களானால் இந்த 'சிச்சுவேஷன்' பொதுவானது. அனால் கதை வித்தியாசமானது.

இருவரும் கவிஞர்கள் தான். இதில் புகழ் பெற்றவர் எலிசபத். அம்மா இல்லாத எலிசபத் அப்பாவோட கண்டிபிலேயே வளந்ததினால் 39 வயதிலேயும் உலகம் தெரியாமல் இருந்தாள். வீட்டு வாசல் கூட எப்படி இருக்கும் என்று தெரியாது.

ஒருநாள் ராபர்டின் கவிதையை படித்துவிட்டு அவரை பாராட்டியே தீரவேண்டும் என்று முடிவெடுத்தாள். அப்போது அவள் புகழின் உச்சியில் இருந்ததால் 1844 - ல் வெளிவந்த "லேடி ஜெரால்டின் காதல்"  என்ற கவிதையில் ராபர்டை மறைமுக பாத்திரமாக்கினாள்.

அதற்கு ராபர்ட் நன்றி கடிதம் எழுத, இருவரும் மாறி மாறி கடிதம் எழுதிக்கொண்டனர்.

ஒருநாள் ராபர்ட் எலிசபத்தை பார்த்தே தீரவேண்டும் என்று சொல்ல, அவள் நாளையும் (அப்பா இல்லாத) நேரத்தையும் சொல்ல, இருவரும்  சந்தித்துக் கொண்டனர். மாறி மாறி டப்பா டப்பாவாக நெய் ஊற்றிக்கொண்டனர்.

மறு கடிதத்திலேயே "என்னை திருமணம் செய்து கொள்கிறா?" என்று கேட்டார் ராபர்ட். திருமணமாவது? எங்க அப்பன் வெப்பனோட இருக்கான் என்று எலிசபத் சொல்ல, மென்மையான கடிதங்கள் மூலம் ராபர்ட் மெல்ல மெல்ல எலிசபத்துக்கு துணிவூட்டினார்.

தந்தையின் மிரட்டல்களையும் மீறி ராபர்டுடன் இத்தாலிக்கு சென்றாள். திருமணம் அவளை அடியோடு மாற்றியது. எப்போதும் சோகமாக வீட்டிலேயே இருந்த எளிசபதை உற்சாகம் சூழ்ந்து கொண்டது. வாழ்கை மிக மிக அர்த்தமுள்ளதாக மாறியது.

ஒரு காவியம்  

Posted by Vishnu

கல் தோன்றி மண் தோன்றா காலம் முதல் காதல் இன்னுமும் இருந்துகொண்டுதான் இருக்கிறது. ஆனால் அரியணை எரிய அரசர்களும், வாள் வரைந்த எல்லைகளும் இப்போது இல்லை.

பல ஞானிகளும் யோகிகளும் காதல் காவியங்கள் இயற்றியுள்ளனர். யமுனைக்கு உயிர் வார்த்த ராதா கிருஷ்ணா காதல் காவியம், வியாசரின் மகனான சுக ப்ரும்ம ரிஷியால் எழுதப்பட்டது தான்.

திரேதா யுகம். பெண்ணுக்கு ஆபத்து என்றால் பறவைகளும் விலங்குகளும் கூட காப்பாற்ற போராடி உயிர்த்யாகம் செய்த காலம். பெண்கள் தங்கள் வாழ்கை துணையை தாங்களே தேந்தெடுக்க சமூகம் அனுமதித்த காலம்.

கன்னியரின் கடைக்கண் பார்வை பட்டால் காளையர்க்கு மாமலையும் ஓர் கடுகாம். இப்போது புரிகிறதா, யாருமே உடைக்கமுடியாத சிவ தனுசை ராமன் ஒரு குச்சியை உடைப்பதுபோல உடைத்தான் என்று?

அட ஒரு பொடிப்பயல் வில்லை உடைத்துவிட்டானே யாரவன்? தசரதன் மகன். மைதிலியின் தாய் ஜனகனை ஒரு இடி இடிக்க. அதன் அர்த்தம் அறிந்த விஸ்வாமித்ரர் "தசரதன் மகன் தான். ஆனால் வசிஷ்டரின் வளர்ப்பு" என்றார்.

சீதாவிடம் காதல் வயப்பட்ட ராமன் அதிலிருந்து கடைசிவரை மீளவே இல்லை. வேறுஒரு பெண்ணின் காதல் சீதையின் காதல் அளவிற்கு இல்லையெண்டால்? அதனால் இந்த விஷயத்தில் ராமன் 'ரிஸ்க்' எடுக்கவில்லை.

த்வாபர யுகம். பெண்ணுக்கு அவமானம் என்றால் சபையோர்கள் கூட மேலும் கீழும் 'கார்க்' வைத்து அடைத்துக்கொண்டு இருந்த காலம். பெண்களுக்கு கட்டாயமாக விருப்பம் இல்லாதவனை திருமணம் செய்வித்த காலம்.

ருக்குமிணிக்கு சிசுபாலனை கட்டயதிருமணம் செய்ய ஏற்பாடு நடந்து கொண்டிருந்த வேளை.

ருக்குமிணி கடிதம் எழுதி அந்த வழியாக சென்ற ஒரு முதியவரிடம் கொடுத்தனுப்பினாள். (இந்த பகுதியில் இணைக்கப்பட்டுள்ள பாடல் வரிகள் "ஜோதா அக்பர்" என்ற திரைப்படதிலிருந்து சுடப்பட்டது.)

மன் மோஹனா!
என்னுயிர்  கண்ணா!
கார்முகில் வண்ணா!
வாராயோ 
கோதையின் குரலை கேளாயோ 
விடை பெற்று  வாராய் காசி மதுரா 
விடைசொல்ல வாராய் வாழ்கை புதிரா 
நீயின்றி சுயம்வரமா?
கார்முகில் வண்ணா வாராயோ 
கோதையின் குரலை கேளாயோ 

இக்கடிதத்தை தாங்கிக்கொண்டு நடைபயணமாய் த்வாரகைக்கு சென்றார் அந்த முதியவர். இதற்கிடையில் சிசுபாலன், கிருஷ்ணனின் பரம எதிரியான ஜராசின்தனை கூட்டு சேர்த்துக்கொண்டு தனது திருமணநாளில் கிருஷ்ணனனால் தொந்தரவு இருக்ககூடாதென்று ஜராசிந்தனின் படையையும் சேர்து காவல் வைத்தான்.

ப்ருந்தாவன நந்தகுமாரா
சகியின் வேண்டுதல் அறிவாயா?
நீங்காமல் வருவாயா? நகம் போலே பிரிவாயா?
நவநீதா முரளிமநோஹாரா
நங்கையின் மனதை புரிவாயா? புறக்கணித்தே செல்வாயா?
என் சோகங்கள் தீர்ப்பாயா?
என் தாகங்கள் தீர்ப்பாயா?

ஒருவழியாக அந்த முதியவர் த்வாரகையை அடைந்தார். கிருஷ்ணன் அவருக்கு காலலம்பி, உணவு அளித்து உபசாரங்கள் எல்லாம் செய்தான். ஜராசிந்தனின் சேனைகளும் சிசுபாலனின் சேனைகளும், கோட்டை காவல் வ்யூகம் அமைத்தன.

புருஷோதமனே உன் உதட்டில் புல்லாங்குழலாய் தவழ்வேனா?
உன் ச்வாச காற்றாகி உயிர்பெற்று வாழ்வேனா?
பார்த்திபனே உன் பார்வையினால் பார்கடலமுதம் பெறுவேனா?
பசிதாகம் மறப்பேனா?
உன் கோகுல தோட்டத்திலே கோபியராவேனா?

ஓய்வேடுதப்பின் அந்த முதியவர் தான் கொண்டுவந்த கடிதத்தை கிருஷ்ணனிடம் கொடுத்தார். அதை படித்துவிட்டு புன்சிரிப்போடு ரதத்தில் ஏறினான் கிருஷ்ணன். ருக்மிணிக்கு மணப்பெண் அலங்காரம் செய்து மனவரைக்கு அழைத்து சென்று கொண்டிருந்தனர்.

வாழ்கையென்னும் கடலின் தினமும் அலையின் மேலே அலையடிக்க
இதயமென்னும் படகு அதில் தடுமாறி மோதிடுதே
தூயவனே துடுப்புகள் போட்டு கரையினில் ஏற்றி விடுவாயா?
நடுக்கடலில் விடுவாயா?
வசீகரா  வனமாலி என் வேதனை தீராய் நீ.

என்று ருக்மிணி மனதிற்குள் நினைக்கும் முன், மணவறைக்கு ரத்தத்தில் வந்தான் கிருஷ்ணன். வழக்கமாக எல்லா கதைகளிலும் வருவது போல அவள் ரத்தத்தில் ஏறினாள். மின்னலாய் மறந்தனர் இருவரும்.

சிசுபாலன் ஜராசிந்தனிடம் "ருக்மிணி எங்கே?" என்று கேட்டான்.

"கிருஷ்ணன் தூக்கிண்டு போய்ட்டான்."

"நீ என்ன பண்ணிண்டு இருந்தே?"

"நாங்களெல்லாம் பாத்துண்டு இருந்தோம்."

"அதுக்காக தான் உங்களையெல்லாம் நான் காவலுக்கு வச்சேனா?"

"சிசுபாலா! கோபப்படாதே. இதுதானே உனக்கு முதல்முறை கிருஷ்ணனிடம் தோற்பது! முதல் முறை அப்டிதான் இருக்கும். போக போக சரியாய்விடும்."

ஒரு வசீகரமான கலை!  

Posted by Vishnu

காதலிக்கும்போது எப்டியோ தெரியாது ஆனால் அதை வெளிப்படுத்தும்போது மட்டும் "அம்பி" ஆகிவிடுகிறோம். அம்பி மாதிரி கோமாளித்தனமாவாவது காதலை சொல்லணும். அதுவும் இல்லேனா எப்பிடி? உங்கள் மனைவி ஆகட்டும் காதலி ஆகட்டும் நீங்கள் அவளை காதலிக்கிரீர்கள் என்று அவளுக்கு தெரியாமலே இருந்துவிடப்போகிறது. அதனால் ரெமோ மாதிரி குலுக்கிவிட்ட பீர் பாட்டில் போல காதலை வெளிக்கட்டுங்கள்.

அதிகமா செலவில்லாத நிறைய "ரெமோ" ஐடியாக்கள் இருக்கு. உங்கள் பீட்பாக் மற்றும் நீங்கள் புதுமையாக முயற்சி செய்து அதற்கு பரிசாக பூரி செய்து போட்டிருந்தாலும் சரி பூரி கட்டயால ரெண்டு போட்டிருந்தாலும் சரி கமெண்டில் பகிரவும்.

  • முதல்ல நாம நம்மள லவ் பண்ணனும். நம்பளையே நாம லவ் பண்ணாம அடுத்தவங்கள எப்படி பண்ணுவோம்? தவிர, நாமளே நம்பள லவ் பண்ணாம அடுத்தவங்க நம்பள லவ் பண்ணனும்னு எதிர்பாக்க முடியாதுல?

  • தினமும் காலையில் (பல் தேச்சுட்ட்டா நல்லது) உங்கள் துணைவியை "இறுக அணைச்சு ஒரு உம்மா தரணும்"

  • வீட்டை விட்டு கிளம்பும் போது "ஐ லவ் யூ" னு மென்மையா சொல்லணும்.

  • உங்களுக்காக செய்யும் வேலைக்கு அவளை பாராட்டியே தீரவேண்டும்.

  • "ஓ! உன்கருத்து அப்படியா?" னு புன்னகையுடன் அவள் கருத்தை ரசியுங்கள். "உளறாதே! எனக்கு எல்லாம் தெரியும்" னு வெடிக்கறது அநாகரிகம்.

  • திடீர் திடீர் னு முத்தம் கொடுக்க வேண்டும். (ஒரே வீட்டில் இருந்தாலும் கூட) அப்பப்போ லவ் லெட்டர் குடுக்கவேண்டும்.

  • இப்போலாம் "போக்கே" பாஷன். அந்த காலத்திலெல்லாம் மல்லிகை பூ அல்வா வாங்கி குடுக்கர்த்து வழக்கம்.

  • அவளுடைய நண்பர்களையும் உறவினர்களையும் மரியாதையுடன் நடத்த வேண்டும்.

  • அவள் ஏதேனும் சிறு தவறு செய்தால் உடனே மன்னிக்க வேண்டும். மணிக்கணக்கில் முஞ்சிய தூகிவசுண்டு இருக்கரதுக்கு பேர் லவ் இல்ல.

  • அவள் "அப்செட்" ஆகறதுக்கு நீங்கள் காரணமாக இருந்தால், உடனே மன்னிப்பு கேட்க வேண்டும். மன்னிப்புனா சும்மா "சாரி" னு சொல்லிடு போய்டகூடாது. ஐ காண்டக்டோட அவள் கையை புடிச்சுண்டு மன்னிப்பு கேக்கணும், அவள் முகத்துல புன்சிரிப்பு வரவரைக்கும்.

  • அப்பப்போ எங்கயாவது நடந்து போகும்போது அவள் விரல்களை கொர்துக்கணும்.

  • எப்போவாவது எதுக்காவது அவள் கண்ணீர் விட நேர்ந்தால், 'இடிச்ச புளி' மாதிரி உக்காண்டு இருக்காம அவளை மார்பில் சாய்த்துக்கொள்ள வேண்டும். கண்ணீர் சேகரிப்பு திட்டம்.

  • அப்பப்போ அவள் குஜால் ஆகராப்ல எதையாவது பண்ணிண்டே இருக்கணும்.

  • அவளுடைய வேலைகளில் அவளுக்கு வாலண்டரியா உதவணும்.

  • அவள் மேலான உங்கள் காதலை அவளுக்கு பூரிப்பு வராப்புல 'பப்ளிகுட்டி' பண்ணனும். கள்ள காதல்-ல இது சாத்தியம் இல்லை. நல்ல காதல்-னா பப்ளிக்குட்டி பண்ணலாமே!

  • பொறுமையாகவும் அக்கறையுடனும் அருகில் அமர்ந்து அவளது பயத்தை போக்குங்கள்.

  • உங்கள் தகராறுகளை பெட் ரூமுக்கு கொண்டு செல்லாமல், மன அமைதியுடனும் மகிழ்ச்சியுடனும் பெட் ரூமுக்கு போங்கள். முகத்தை திருப்பிக்கொண்டு படுத்துக்கொள்ளாதீர்கள்.

  • பிரார்த்தனை செய்யும்போது அவளுக்காக முதலில் வேண்டிக்கொள்ளுங்கள்.

  • அவள் கேட்ட அளவு காதலை அவளுக்கு தருக. அவளும் நீங்கள் எதிர்பார்த்த அளவு காதலை தருவாள்.